எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம்: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுப்பயணம்...
ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். நமது நாடு கிரிக்கெட்டின் தேசமாகத் திகழ்ந்து வந்தாலும், கால்பந்துக்கான மவுசும் குறையாமல் உள்ளது. லியோனல் மெஸ்ஸிக்கு கேரளத்தில் பலரும் ரசிகராகவுள்ளனர். உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா அணியை வழிநடத்திய மெஸ்ஸி, டிசம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், தில்லி உள்ளிட்ட நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களைச் சந்திக்கவிருக்கிறார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
ரூ. 70 கோடியில்...
அதற்கு ஒருமாதம் முன்னதாக, நவம்பர் மாதத்தில் கேரளத்தில் ஆர்ஜென்டீனா - ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவு கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி விளையாடவிருந்தார். அதற்காக ரூ. 70 கோடியில் நேரு விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டு உயர்கோபுர மின்விளக்குகள், இருக்கைகள் மாற்றப்பட்டன. ஆர்ஜென்டீனா அணியில் மெஸ்ஸியுடன் எமிலியானோ மார்டினெஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், ரோட்ரிகோ டி பால், நிக்கோலஸ் ஓட்டமெண்டி, ஜூலியன் அல்வாரெஸ் உள்ளிட்டோரும் விளையாடவிருந்ததால், ரசிகர்கல் ஆரவாரத்தில் இருந்தனர். இந்த நிலையில்தான், அவர் இந்தியாவுக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளதாகவும், அவரது பயணம் ரத்து செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |