Idhayam Matrimony

பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      இந்தியா
Modi 2025-10-17

Source: provided

புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மீனவர்கள் நலன் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி - திறன் மேம்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் பற்றி அவர்கள் விவாதித்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இலங்கை பிரதமர், டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கு சென்றார். இவர் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் நேற்று ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமையான கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து