எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வகையான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:- ஜனவரி (2026) மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்தச் சேவை டிக்கெட்டுகளுக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். 21-ந் தேதியில் இருந்து 23-ந்தேதி வரை மதியம் 12 மணி வரை தொகை செலுத்தியவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை போன்றவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 23-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
உற்சவள் சேவைகள் மற்றும் அதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான (ரூ.300 கட்டண டிக்கெட்) ஒதுக்கீடு 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதி அறைகள் தொடர்பான ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் தங்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் பதிவு செய்யலாம். மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


