முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      உலகம்
trump 2024-12-30

வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று  அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்துசெய்தன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்கியது. இதை பயன்படுத்தி இந்தியாவும் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2018-20-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7 சதவீதமாக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2023-24-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரித்தது. அதன் மூலம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இவ்வாறு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியையும் ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என கூறினார். ஆனால் இது குறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி ஒரு போன் உரையாடல் நடத்தியது எனக்கு தெரியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் ஏற்கனவே பின்வாங்க தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது” என்று தெரிவித்தார். அதே சமயம், அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து