முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பி கட்ன கதை திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      சினிமா
Kambi-Katna-Story-Review 20

Source: provided

மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை.  நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் ஒருவர் கோவிலை கட்டிவிடுகிறார். சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த வைரத்தை தேடுகிறார். வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், அசால்டாக நடித்து அசத்தி இருக்கிறார்.  முக்கேஷ் ரவி, ஸ்ரீரஞ்சனி ஷாலினி, சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் கொடுத்த வேலை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் ராஜநாதன் பெரியசாமி, போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் சில சம்பவங்களை வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். திரைக்கதையில் கவனம் செலுத்தி இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் படம் நிச்சயம் வென்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து