Idhayam Matrimony

காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      உலகம்
Gaza-2025-08-25

நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன பொதுமக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னின்று ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில், "ஹமாஸ் காசாவில் மக்களைக் கொல்வதைத் தொடர்ந்தால், அது ஒப்பந்தத்திற்கு எதிரானது, அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று எச்சரித்தார்.

எனினும், காசாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்பப் போவதில்லை என்றும், அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். காசவில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் உடன் ஹமாஸ் மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து