எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நேற்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இந்திய மக்களுக்கு நெதன்யாகு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வாழ்த்து கூறியதற்காக நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, உங்களுடைய பிறந்த நாளுக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்து கூறுகிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.
வருகிற ஆண்டுகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான தூதரக அளவிலான நட்புறவு தொடர்ந்து வளம் பெறும் என்றும் அவர் அதில் தெரிவித்து இருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். புதிய கண்டுபிடிப்பு, நட்புறவு, பாதுகாப்பு மற்றும் ஒரு சிறப்பான வருங்காலம் ஆகியவற்றிற்கான நட்பு நாடுகளாக இந்தியாவும், இஸ்ரேலும் உள்ளன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


