முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
Rajini 2025-10-22

Source: provided

சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன்’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரையும் தொலைபேசி வாயிலாக பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் பாராட்டு குறித்து மாரி செல்வராஜ், “'சூப்பர் மாரி. சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும், உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்’ என்று ரஜினி சார் தெரிவித்தார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ பார்த்துவிட்டு என்னை அழைத்துப் பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துருவ் விக்ரம், பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபா பரமேஸ்வரன், லால், அமீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைசன்: காளமாடன்’. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தினை தமிழகத்தில் ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து