முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      இந்தியா
Murmu 2025-10-22

Source: provided

பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-அமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு சென்ற திரவுபதி முர்மு இரவில் அங்கு ஓய்வெடுத்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர், பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. 

கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றப்பட்டதால் பிரமாடத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் போடப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரின் சக்கரங்கள் அந்த கான்கிரீட் தளத்தில் புதைந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து பம்பை கணபதி கோவிலுக்கு கார் மூலம் ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கான்கிரீட்டில் சிக்கிய ஹெலிகாப்டரை தள்ளி சக்கரங்களை விடுவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "அவசர அவசரமாக கான்கிரீட் போடப்பட்டதால், அது முழுமையாக தயாராகவில்லை. இதனால் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது, அதன் எடையைத் தாங்க முடியாமல், ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட்டில் புதைந்தன" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து