முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      இந்தியா
Lokpal 2025-10-22

Source: provided

மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதமர், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் போன்ற முக்கிய தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் விசாரிக்க லோக்பால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது லோக்பால் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.ஊழலை விசாரிக்க தொடங்கப்பட்டுள்ள லோக்பால் சமீபத்தில் அதன் உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் 7 பி.எம்.டபிள்.யு. சொகுசு கார்களை வாங்க டெண்டர் விட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லோக்பால் உறுப்பினர்களுக்கு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கும் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் தொடங்கப்பட்டது. தற்போது அது தனது உறுப்பினர்களுக்கு பி.எம்.டபிள்யு. ரக கார் வாங்குகிறதா?. இது நேர்மையாக வரி செலுத்தும் மக்களின் வரி பணத்தை கொள்ளையடிப்பது போன்றதாகும். இந்த பிரச்சினையில் இருந்து மத்திய பா.ஜனதா அரசு விலகி செல்லக்கூடாது. உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து