முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
TNPSC 2024-09-14

Source: provided

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் 2025-ம் ஆண்டு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகியது. இப்பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது. இந்தாண்டு குரூப் 4 தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் என்ற விதம் போட்டி நிலவுகிறது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிராபகர் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் இறுதியில் 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

இந்தநிலையில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. முடிவுகளை தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவே அறிந்துகொள்ளலாம்.

முடிவுகள் வெளியானதும், அடுத்தக்கட்டமாக கட்-ஆஃப் அடிப்படையில் இணையதளம் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் பதிவு எண்கள் இடம்பெற்று இருக்கும். தெரிவு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் நேரடியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து