முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
MRK 2025-10-22

Source: provided

கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. நேற்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நேற்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .

இத்தகவல் அறிந்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்த வீட்டினை பார்வையிட்டார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதி முழுவதும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது தி.மு.க.ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், தாசில்தார் மகேஷ் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியான சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து