முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      இந்தியா      அரசியல்
Dejasvi-2025-10-23

பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.

 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இன்டியா கூட்டணி (மெகா கூட்டணி) என 2 பிரதான கூட்டணி கட்சிகளும், பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளன. மும்முனை போட்டி வரும் நிலையில்,  இன்டியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இன்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தன.

இந்த நிலையில், நேற்று பாட்னாவில் இன்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் வேட்பாளராக வி.ஐ.பி. கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி தயங்கியதே  கூட்டணியில் குழப்பம் உருவாக காரணம் என்று கூறப்பட்டது. தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை தீர்ந்துள்ளதால், இன்டியா கூட்டணியில் நீடித்து வந்த குழப்பங்கள் தீரும் என்று தெரிகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து