Idhayam Matrimony

டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      இந்தியா
Gun 2023-10-05

புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

பீகாரின் பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பீகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து நேற்று அதிகாலை 2.20 மணியளவில் டெல்லி ரோஹினி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, காவல்துறையினர் மீது நான்கு ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் பதில் தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்குர் (21) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். நால்வரையும் ரோஹினி மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பீகாரில் கொலை, ஆயுதக் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து