முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      தமிழகம்
C P -Radhakrishnan 2025-03-

சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

இந்திய துணை ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. அதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதன்படி வரும் 28-ந்தேதி தமிழகத்திற்கு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மறுநாள் 29-ந்தேதி திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து