எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பக்தர்கள் அமன்கோயல், கவுதம்குப்தா, ராதிகாஅகர்வால், கோபால்அகர்வால், பாலகிருஷ்ணா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். இதனையொட்டி அவர்கள், திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பழையப்பேட்டையைச் சே்ாந்த அசோக் என்ற அசோக்ரெட்டியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.
அந்த தரிசன டிக்கெட்டுகளுக்காக அசோக்ரெட்டிக்கு ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 1,750-ஐ அனுப்பி வைத்தனர். ஆனால், தரிசன டிக்கெட்டுகளை அனுப்பி வைக்காமல் அசோக்ரெட்டி திடீரென மாயமாகி விட்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மும்பை பக்தர்கள், திருமலைக்கு வந்து 2-டவுன் போலீசில் இடைத்தரகர் அசோக்ரெட்டி மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


