Idhayam Matrimony

ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது. மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

264 ரன்கள் குவிப்பு...

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஷார்ட்- ரென்ஷா ஜோடி... 

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். மார்ஷ் 11 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேத்யூ, ஷார்ட் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 40 சந்தித்த நிலையில் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஷார்ட்- ரென்ஷா ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ஷார்ட்சுக்கு 2 கேட்சுகளை இந்திய அணியினர் மிஸ் செய்தனர். இதனால் அவர் அரை சதம் கடந்ததுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கானலி- மிட்செல் ஓவன்...

அடுத்து வந்த அலெக்ஸ் ஹேரி 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ரென்ஷா 30 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கானலி- மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கானலி அரை சதம் அடித்து அசத்தினார். ஓவன் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேவியர் பார்ட்லெட் 3, ஸ்டார்க் 4 ரன்னில் வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து