Idhayam Matrimony

பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

பாட்னா: என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் முதல்வராக முடியாது என்று தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், தேர்தலுக்குப் பிறகுதான் முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா தெளிவாக தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம்- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார்தான் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. ஆனால், முதல்வர் வேட்பாளர் அவர்தான் என என்.டி.ஏ. கூட்டணி வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவும்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தேஜஸ்வி யாதவ் சஹர்சா மாவட்டத்தில் உளள் சிம்ரி பக்தியார்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்களால் முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனால் என்.டி.ஏ.-வுக்கு மக்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் முதல்வராக முடியாது.  தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 11 வருடங்களாகவும், 20 வருடங்கள் மாநிலத்திலும் ஆட்சி செய்த போதிலும், பீகார் மாநிலம் ஏழ்மையாகவும், வேலைவாய்ப்பின்மையாகவும், ஊழலாகவும், கிரிமிகல் செயல்பாடு உள்ள மாநிலமாகவும் இருப்பது ஒரு பீகாரியாக எனக்கு மதவேதனையாக உள்ளது.

மோடிக்கு லாலு பயப்படவில்லை. அதேபோல் அவர் மகனுமான நானும் மோடிக்கு பயப்படமாட்டேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து