Idhayam Matrimony

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
School 2023 04 07

Source: provided

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்தார். அன்பில் மகேஷ் தனது பேட்டியில் கூறியதாவது: நவம்பர் 4-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். 

அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறினார். 2026ஆம் ஆண்டு சட்ட சபை தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் தேதி தயாரிக்கப்படும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து