Idhayam Matrimony

அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் கோல்ராஜ்ஹர் மாவட்டம் சலஹடி வனப்பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டு துப்பாக்கி சூடு நடத்தினார். இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த மாவோயிஸ்டு அந்த அமைப்பின் முக்கிய தளபதியான ஹிம்ப்ராம் என்பது தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹிம்ப்ராம் கடந்த 23-ம் தேதி கோல்ராஜ்ஹர் - சலஹடி ரெயில் தண்டவாளத்தில் நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து