Idhayam Matrimony

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      ஆன்மிகம்
Tiruchendur 2024-11-03

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

இதனிடையே, திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று நடைபெறும் சூரசம்ஹாரத்தையொட்டி பாதுகாப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சூரசம்ஹாரத்தையொட்டி பாதுகாப்புப்பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 250க்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும், 20 டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 14 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 45 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள் 80 பேர் தயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து