எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* அடவி நயினார் அணைத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.
* ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.
* வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
* கடையநல்லூர் வட்டம் வரட்டாறு பாசன அணைக்கட்டுகள், குளங்கள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.
* தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.
* கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம், சிவசைலம் கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


