Idhayam Matrimony

வியட்நாமில் கனமழைக்கு 10 பேர் பலி

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      உலகம்
Puyal 2024-07-09

Source: provided

வியட்நாம் : வியட்நாமில் கனமழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய வியத்நாமில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை வெள்ளம் வியட்நாம் மாநிலத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான ஹியூ ஹோய் உள்ளிட்ட நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளது.

கடலோர நகரமான டானாங்கில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். வீடுகள், பயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை, வெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஏகாதிபத்திய தலைநகரான ஹூவில் நீரில் மூழ்கி 5 வயது சிறுமி காணாமல் போனதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. திங்கள்கிழமை ஒரேநாளில் மழைப்பொழிவு 42 அங்குலத்தை எட்டியுள்ளது. ஆறுகள் நிரம்பியுள்ளன. இதுவரை இல்லாது அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவாங் நங்கை மாகாணத்தில் 3 பேர் உயிரிழந்தனர். முக்கிய நெடுஞ்சாலையில் 120-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில வழித்தடங்கள் தடைப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வாகனங்கள் சிக்கி தவிர்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வியட்நாமின் வடக்கு திசையில் உள்ள ஹனோய், தெற்கு திசையில் உள்ள ஹோ சி மின் நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. வியட்நாம் வெள்ள அபாயமிக்க நாடு. குறிப்பாகப் பருவமழைக் காலத்தில் புயலும் வெள்ளமும் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான மக்கள் அதிக வெள்ள அபாயமுள்ள பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து