முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5, ஆயிரம் கோவில்கள் கட்டப்பட உள்ளன. நாட்டில் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரூ.37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகத்தைக் கட்டவும், மேலும் ரூ.3 கோடியில் ஒண்டிமிட்டாவில் ஒரு புனித வனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் 10 நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடியாக எத்தனை டோக்கன்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு வழங்கும் அறிக்கையை பொறுத்து இன்னும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முடிவு அறிவிக்கப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து