முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      தமிழகம்
Raghupathi 1

புதுக்கோட்டை, தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-

வாக்காளர் சிறப்பு திருத்த முறை பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு இயக்கங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுகிற நிலையில், அவர்களை பொறுத்தவரை நேர்மையானவர்கள். ஆனால் அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்போது, அதனை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வருகிறது. 

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்காக உயர்ந்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து பலர் வேலை பார்க்கின்றனர். பின்னர் தங்களது பண்டிகை மற்றும் சொந்த நிகழ்ச்சிக்கு திரும்ப சென்று விடுகின்றனர். அவர்கள் இங்கு இருக்கக்கூடிய வாக்காளர்களாக பதியக்கூடும்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாது. அவர்களது மாநில அரசியல் சூழலை வைத்து தான் செயல்படுவார்கள். தமிழகத்தில் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்பது தான் எங்கள் கருத்து. அவர்கள் வேலைக்காக அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள் தற்காலிகமாக வந்து செல்பவர்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு நிரந்தரமாக இருக்கக்கூடியவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து