Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தெலுங்கானா மாநில புதிய அமைச்சராக பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Azharuddin 2025-10-31

Source: provided

ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலுங்கானா அமைச்சராக பதவியேற்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் 2009ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.. கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். இதனிடையே, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-அமைச்சராக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். அதேவேளை, தெலுங்கானாவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மந்திரி சபையில் முகமது அசாருதீனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நியமன அமைச்சராக முகமது அசாருதீன் இடம்பெற்றுள்ளார். தெலுங்கானா அமைச்சராக அசாருதீன் நேற்று பதவியேற்றுள்ளார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்தார்.

தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இடைத்தேர்தலில் தொகுதியை கைப்பற்ற அசாருதீனுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து