Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கடந்த 16-ம்தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த 19ம் தேதி தீபாவளி விடுமுறைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்குப்பின் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கரூர் வந்தனர். இன்று காலை 10 மணியளவில் கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 5 மணிநேரமாக விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு கயிறுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தியும், 3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலம் அளவீடு செய்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து