எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சென்று பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கூட்டாக இணைந்து வந்து வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக பசும்பொன்னில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் மூவரும் இணைந்து வந்து மரியாதை செலுத்தியது குறித்து ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், "ஒரு நாள் பரபரப்பு அது. நீங்கள் அதை கூடுதல் பரபரப்பு பண்ணாமல் இருந்தால் எல்லாம் சரியாகி விடும். இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. இது ஒன்றும் புதிதல்ல" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


