முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்த விவகாரம்: நயினார் கருத்து

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Nainar-Nagenthran

Source: provided

திருநெல்வேலி : ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது குறிதது நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது யாருக்கு பலம் என்பது அவர்கள் விடும் அறிக்கையை பொறுத்துதான் தெரியும் எனவும், தமிழக முதல்வர் பிஹார் மக்களை தவறாக பேசியதைத்தான் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார் என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்

திருநெல்வேலி பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை நேற்று கொண்டாடி வருகிறோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதராக திகழ்கிறார்.

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து பசும்பொன் சென்றார்கள். இது யாருக்கு பலம், யாருக்கு பலவீனம் என்பது அவர்கள் விடும் அறிக்கையை பொறுத்துதான் தெரியும். இப்போது அவர்களைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அதி.மு.க.வை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

பிஹார் மக்களை தி.மு.க.வினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறிய கருத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக நீங்கள் கேட்பது முற்றிலும் தவறு. ஏற்கெனவே தமிழக முதல்வர் பிஹாரிகளை பற்றி பேசியதைத்தான் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின்தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். முதல்வர்தான் வந்தேறிகள் என பேசினார். எனவே முதல்வர் வட மாநிலம், தென் மாநிலம் என பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் பொய்யே பேசி வருகிறார்.

இந்த ஆட்சி பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை, பணியாளர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது அது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கரூர் விவகாரத்தை பொறுத்தவரை இந்த ஆட்சி பழிவாங்கும் ஆட்சி. ஆளுங்கட்சி ஒரு மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம், பள்ளிகளை மூடி கூட அவர்கள் நிகழ்ச்சி நடத்துவார்கள்” என்றார். தொடர்ந்து தவெகவுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்பது குறித்து கேள்விக்கு, “கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்தர பகைவர்கள் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஆயிரம் கோடிக்கு கொண்டு வந்த திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடும்” என்று கூறினார்.

தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உட்பட அதி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் பா.ஜ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தனர் அவர்களை நயினார் வரவேற்றார். பின்னர் அனைவரும் கூட்டாக அங்கிருந்த சர்தார் வல்லபாய் படேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து