Idhayam Matrimony

இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      இந்தியா
Pinaraye 2024-12-04

Source: provided

திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.

கேரளாவின் நிறுவன தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரள சட்டசபையில் விதி 300-ன் கீழ் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை கேரளா அடைந்து சாதனை படைத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

நூறாண்டுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னான தொடக்க ஆண்டுகளில் நீண்ட, நெடிய போராட்டங்கள் மேற்கொண்டு இதனை அடைந்திருக்கிறோம். அந்த போராட்டங்களின் விளைவால், ஒருங்கிணைந்த கேரளா உருவானது. அதுவே மலையாளிகளின் கனவாகவும் இருந்தது. நேற்று ஒருங்கிணைந்த கேரளா உருவாகி 69 ஆண்டுகள் ஆகின்றன. வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அப்போது கிராமப்புறத்தில் 90.75 சதவீதம் என்ற அளவிலும், நகர்ப்புறத்தில் 88.89 சதவீதம் என்ற அளவிலும் வறுமை கோட்டுக்கு கீழே மக்கள் இருந்தனர். இந்நிலையில், வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது என்று பினராயி விஜயன் சுட்டிக்காட்டி பேசினார். எனினும், காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து