Idhayam Matrimony

இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      இந்தியா
amit-shah 1

Source: provided

பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் வருகிற 4 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பீகாரில் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். நாலந்தா நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-“காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பீகார் மக்களின் மன உணர்வு தெரியாது. அதனால் அவர் பீகார் மக்கள் மிகவும் விரும்பி கொண்டாடும் சூரிய பூஜையை கடுமையாக இழிவுபடுத்திப் பேசியுள்ளார். ராகுல் காந்திக்கு எப்போதுமே தாய்வழி வீடான இத்தாலி பற்றிதான் தெரியும். அவருக்கு அந்த நாட்டின் கலாச்சாரம்தான் அடிப்படையாக உள்ளது. அதனால்தான் அவருக்கு இந்திய கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாது. ராகுலின் இந்த பேச்சுக்கு அவர் விலை கொடுத்து தீர வேண்டும். சூரிய பூஜையை அவமதித்த அவரை பீகார் மக்கள் பழிக்கு பழி வாங்குவார்கள்.

ராகுல் பிரதமரையும் அவரது குடும்பத்தினரையும் அடிக்கடி தரம் தாழ்த்திப் பேசுகிறார். ஓட்டுக்காக பரதநாட்டியம் ஆடுவார்கள் எனவும் பேசுகிறார். பிரதமர் மோடி நடத்தும் சூரிய பூஜையை ‘நாடகம்’ என்கிறார். அவருக்கு சூரிய பூஜை என்றாலே என்னவென்று தெரியாது; தெரிந்தது எல்லாம் இத்தாலியில் நடக்கும் கொண்டாட்டங்கள்தான்.ராமர் கோவிலை கட்ட விடாமல் காங்கிரஸ்காரர்கள் என்னவெல்லாமோ செய்து வந்தார்கள். தற்போது அங்கு ஆலயம் கட்டப்பட்டு அமைதி நிலவுகிறது என அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து