எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
பீகாரில் வருகிற 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. எனினும், நேர்மையான முறையில் பணிகள் நடந்துள்ளன என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டமிது என கூறி இதற்கு எதிராக போராடிட, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இதன்படி, தமிழகத்தில் உள்ள 60 கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" தொடங்கியது. எனினும், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் விஜய் தலைமையிலான த.வெ.க. புறக்கணித்து உள்ளது. நாம் தமிழர், பா.ம.க. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகளும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு வருகை தந்த கட்சி தலைவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
இதன்பின்னர் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்றிருந்த தலைவர்கள் முன்னிலையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். அவர் பேசும்போது, பீகாரில், பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. அதுபோல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என பேசினார்.
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று பேசியுள்ளார். அதனால், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


