Idhayam Matrimony

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Fisher-Man 2025-02-20

Source: provided

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். அவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ஆனால், அவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தனர். இதனால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் குறைந்த அளவிலான மீன்களுடன் கரைக்கு திரும்பினர். பெரும்பாலான படகுகளில் எதிர்பார்த்த அளவு மீன்கள் இல்லாததால் அதிக நஷ்டம் ஏற்பட்டது என மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து