முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி திங்கள்கிழமை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடியே 20 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதிக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பிலும், மாவட்ட திமுக சார்பிலும் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் காமராஜர் தங்கிய நினைவு இல்லத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து ராணிப்பேட்டை ஜிகே உலக பள்ளியில் இறகு பந்து உள்விளையாட்டரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 72880 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.68.7 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் நேற்றும், இன்றும் வெப்பநிலை அதிகரிக்கும்.

இந்த விழாவில் கைத்தறி மற்றும் பிரிவுகள் துறை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆற்காடு எம்எல்ஏக்கள் ஜெ. எல். ஈஸ்வரப்பன்,ஏ.எம். முனிரத்தினம் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து