Idhayam Matrimony

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
MadhampattI-rANGARAJ

Source: provided

சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஜாய் கிரிசில்டா குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார். தான் குழந்தையின் தந்தை என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், டி.என்.ஏ. ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து