முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

Source: provided

சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.

த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில்  நடைபெற்றது. அதில் பேசிய தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

கரூர் துயரம் நடந்தது முதல் 16 நாட்கள் அவதூறுகள், பொய் பிரச்சாரங்கள், துரோகங்கள். சூழ்ச்சி என்றால் என்னவென்று தெரியாத நமது கட்சி,  சூழ்ச்சி என்றால் என்னவென்று முதல் முறையாக கரூரில் பார்த்து, அதனை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தில் பேசி பேசி வளர்ந்த கட்சி தி.மு.க.,  பொய்யை மட்டுமே தலைவர் (விஜய்) மீது பரப்பி இருக்கிறது. ஆனால் அமைதியின் மூலம், மௌனப் புரட்சியை உருவாக்கி இருக்கிறார் தலைவர். 2026இல் இந்த சூழ்ச்சியை அவர் தூக்கியெறிவார்.

‘பொதுச் செயலாளர் ஓடிவிட்டார், நிர்மல் குமார் ஓடிவிட்டார்’ என்கிறார்கள். யார் ஓடினார்? கருணாநிதி கைதானபோது நீங்கள் ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள். உங்களது சூழ்ச்சிகளை சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கியெறிய எங்களுக்கு தெரியும். மக்கள் எங்கள் விஜய்யை பார்க்க மட்டும் வரவில்லை; அன்பு கொண்டு வருகிறார்கள் மக்கள். நிர்வாகிகள் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை மட்டும்தான் நாங்கள் சொல்ல முடியும். ஆனால் மக்கள் எவ்வளவு வருவார்கள் என்று எங்களால் எப்படி சொல்ல முடியும்? இதனை நீங்கள் கணிக்க முடியவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்து விடுங்கள்.இதை கணிக்காமல் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? கரூர் விவகாரத்தை 2 நாளில் கடந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

என் குடும்பத்தில் ஒன்று நடந்தால் நான் 30 நாள் வீட்டில்தான் இருப்பேன்.வேறு எங்கும் இல்லாத வரவேற்பு கரூரில் இருந்தது. காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், சூழ்ச்சி என்றே தெரியாத எங்கள் தலைவர் காவல்துறைக்கு நன்றி சொல்வாரா? எங்களுக்கு சூழ்ச்சி தெரியாது. அதை நான் ஒத்துக்கிறேன். ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் உண்மையாக இருந்தபடியே செல்வோம். நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்,” என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து