முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பில் கபடி வீரர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

சண்டிகர்: பஞ்சாப்பில் கபடி வீரர் குர்வீந்தர் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் குர்வீந்தர் சிங். இவர் மாவட்ட அளவில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் குர்வீந்தர் சிங் நேற்று முன்தினம் மாலை சமரலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், குர்வீந்தர் சிங்கின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, குர்வீந்தர் சிங் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் விளையாட்டு வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து