Idhayam Matrimony

ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      இந்தியா
dhaood

Source: provided

மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளாகியிருக்கிறது.

மும்பையில், தாவூத் இப்ராஹிமின் மறைந்த சகோதரி ஹசீனா பார்க்கருக்குச் சொந்தமான சொத்துகள் செவ்வாயன்று ஏலம் விடப்பட்ட போது ஏலத்தில் ஒருவர்கூட பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ரத்னகிரி மாவட்டம், கேத் தாலுகாவில், தாவூத்தின் சொந்த கிராமமான மும்பாகேவில் நான்கு விவசாய நிலங்கள் உள்பட ஒன்பது சொத்துகள் ஏலத்துக்கு விடப்பட்டன. ஆனால், ஏலம் எடுக்க ஒருவரும் வராததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு விவசாய நிலங்களும் முதலில் தாவூத்தின் தாய் அமினா பி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு பிறகு, அது அவரது சகோதரி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம் விடப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து