முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      இந்தியா
Bihar-DCM-car-attacked-2025

பாட்னா, பீகார் துணை முதல்வர்  விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. பீகார் துணை முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.  

இந்த நிலையில், லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு காலை முதல் நேரில் சென்று விஜய் குமார் ஆய்வு செய்தார். அப்போது, அவரது தொகுதிக்குள்பட்ட கோரியாரி கிராமத்துக்கு விஜய் குமார் சென்றபோது, அவரை ஊருக்குள் நுழைய விடாமல் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், மாட்டுச் சாணம், கற்கள், காலணிகளை விஜய் குமார் சென்ற காரின் மீது வீசியதுடன், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

உடனடியாக காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்ட விஜய் குமார், அதிரடிப் படையினரை அனுப்புமாறும், தான் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய விஜய் குமார், “இவர்கள் அனைவரும் ஆர்.ஜே.டி. குண்டர்கள். ஆட்சியில் இல்லாதபோதே இவர்களின் அட்டூழியங்களைப் பாருங்கள். என் வாக்குச்சாவடி முகவரை மிரட்டி, காலை 6.30 மணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். வாக்காளர்களை வெளியே வர விடுவதில்லை.” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து