முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

சென்னை,  தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இது அரசியலுக்காக போடுகின்ற வேடம் என்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (நவம்.06) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடம் மற்றும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு தரப்பட்டு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 

இது சட்டத்தின் ஆட்சி. ஆகவே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிப்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்தால் கேளுங்கள், நடந்த சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதில் இந்த ஆட்சி உறுதியாக இருக்கின்றது. மணிப்பூரை போல் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆட்சி உறங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை” என்று ஒரு பழமொழி உண்டு. 

எந்த பிரச்சனையுமே கையில் கிடைக்காதவர்கள் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை கையில் எடுத்து ஆடுவது தேர்தலை மையப்படுத்தி செய்கின்ற ஒரு போராட்டமே தவிர இது உண்மை இல்லை என்று போராட்டம் செய்பவர்களுக்கே தெரியும். எந்த குற்ற சம்பவம் நடந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்காக போடுகின்ற வேடம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து