முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: 60.13 சதவீத வாக்குகள் பதிவு

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      இந்தியா
Bihar-Election-2025-11-06

பாட்னா, பீகாரில் நேற்று 121 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 60.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் 6ம் தேதி (நேற்று), 11-ம் தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. 121 சட்டசபை தொகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடந்தது.  121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர்.மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

வேட்பாளர்களில் இன்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா) மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்பட 16 அமைச்சர்கள் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். மொத்தம் 45 ஆயிரத்து 341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.

இதற்கிடையே நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இன்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ், முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் தங்கள் வாக்கைச் செலுத்தினர். இந்த நிலையில் 5 மணி  நிலவரப்படி, பீகாரில்  60.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து