எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
ராமர் கோவில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் , ஆபரேஷன் சிந்தூர் என உறுதியளித்த அனைத்தையும் நான் நிறைவேற்றி வருகிறேன். பீகார் வரலாற்றில் முதல் முறையாக நேற்று முன்தினம் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
இந்த பெருமை பீகாரின் தாய்மார்கள், சகோதரிகளையே சாரும். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்க மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசே ராஷ்டிரிய ஜனதா தளத்தில் வாக்குறுதிகளை நம்பவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


