Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மக்களை சந்திக்க சென்றார். அவர் மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றபோது,  அதை தாக்கியதாக 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 8 பேருக்கும் மதுரை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. 8 பேரும் 2 வாரங்கள் சேலம் டவுன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வேறு சிலர் ஜாமின் பெற்றுள்ளதால், 2 வாரங்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கௌதம் தனசேகர், அன்புமணி, செந்தில் குமார், சுப்ரமணி ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து