எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக ஏற்கனவே சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் காரணமாக, அங்கு இயங்கி வந்த சில முக்கிய விரைவுரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10, 2025 வரை இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. அதன்படி, நவம்பர் 11-ந்தேதிக்கு பிறகு எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படுமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;-
உழவன் எக்ஸ்பிரஸ் நவ. 10 முதல் 29 வரை தஞ்சாவூர் - தாம்பரம் இடையே இயக்கப்படும். கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம். ராமேஸ்வரம் - சென்னை சேதுஅதிவிரைவு ரயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்.
ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும் ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் நவ. 10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம். ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும். மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் சென்னை எழும்பூர் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு ரயில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


