முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2025      இந்தியா
Election 2023-11-06

Source: provided

பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

பீகார் சட்டசபை பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.

பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார். பின்னர் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது. இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரச்சாரம் செய்தனர்.

மீதிமுள்ள 122 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு உச்சக்கட்ட பிரச்சாரம் நடந்தது. மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதைபோல இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில், பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதிநாளான நேற்று தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து