Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16-ஆம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பாகவும், ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதனால், கடைசி நேர நெரிசலில் சிக்கி பயணிப்பதைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிகள் திட்டமிட்டு முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ரயில்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 9-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட முக்கியமான ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து