எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அதிபர் ட்ரம்ப் அமர்ந்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இருக்கையில் கண்களை மூடியபடி அமர்ந்து இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் ட்ரம்ப் இருக்கையில் அமர்ந்து குட்டித் தூக்கம் போட்டுவிட்டதாக கலாய்த்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், ட்ரம்பின் உடல் நலம் கவலை அளிப்பதாகவும், பணி நேரத்தில் அவரது செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை உடல் எடை குறைப்புக்கான மருந்து பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபோதுதான் ட்ரம்ப் லேசாக கண்ணை மூடியதாகவும், இது தொடர்பான புகைப்படங்களை வைத்து எதிர்க்கட்சிகள் தற்போது விமர்சனத்தை முன்வைத்து வருவதாக ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் கூறி வருகின்றனர்.
சமீப காலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ட்ரம்பின் கையில் காயம் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் பரவின. அவருக்கு இரத்த நாளங்களில் பிரச்சினை இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. அதில், டொனால்ட் ட்ரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


