Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த மின்வாரிய அதிகாரிகள்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
Electricity-Board 2023 04 2

கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொட்பாக மின்வாரிய அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.

கரூரில் நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடை பட்டதால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது? மின்வாரியத்தினர் யார்? யார்? பணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து