முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் நேரில் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.15 - தேர்தல் வெற்றியை தொடர்ந்து,  பல்வேறு கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள், வெளிமாநில முதல்வர்கள், கவர்னர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள். நடிகர் விஜய் சென்னை போயஸ் தோட்த்திலுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதுகுறித்து, அ.தி.மு.க. தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரப்பதாவது:-

நடைபெற்று முடிந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, முதல்வராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திரமோடி, டெல்லி மாநில முதல் மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்கி ஆளுநர் எம.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைஆரர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்மன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையை சார்ந்த ஐ.பிஎஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள்  மற்றும் பல்வேறு  அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும, திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago