முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      சினிமா
Kumki-2 2025-11-11

Source: provided

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கும்கி 2’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். கும்கி வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் பிரபு சாலமன். இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பிரபு சாலமன், “இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது. இதற்காக என்னுடன் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, ஒளிப்பதிவாளர் சுகுமார் மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். நெல்லையம்புதி என்ற இடத்தில் இடத்தில் மின்சாரம் இல்லாமல், நெட்வொர்க் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தினோம். படக்குழுவினர் மிகவும் சிரமப்பட்டார்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆன்மாவை கொடுத்து சிறந்த படமாக கும்கி2 வைக் கொடுத்திருக்கிறார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து